Advertisement

பைனலில் வினேஷ் போகத்

ரோம்: இத்தாலியில் நடக்கும் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம் 53 கி.கி., பிரிவுக்கான பைனலுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார்.

இத்தாலி தலைநகர் ரோமில் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி நடக்கிறது. இதன் பெண்களுக்கான 53 கி.கி., பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் நம்பிக்கை அளித்தார். முதல் சுற்றில் சீனாவின் குயான்யுவை 4-2 என வீழ்த்திய இவர், காலிறுதியில் சீனாவின் லியோவை 15-5 என சாய்த்தார். அரையிறுதியில் ஜொலித்த வினேஷ் 10-0 என உக்ரைனின் பெரிஜாவை தோற்கடித்தார். பைனலில் ஈகுவடாரின் லுாயிசா எலிசபெத்துடன் மோதுகிறார். இதில் வென்றால் தங்கத்தை தட்டிச்செல்லாம்.

பெண்களுக்கான 57 கி.கி., பிரிவில் இந்தியாவின் அன்சு மாலிக் அசத்தினார். முதல் சுற்றில் அமெரிக்காவின் ஜென்னா ரோசை வீழ்த்திய இவர், காலிறுதியில் நார்வேயின் கிரேசை வென்றார். அரையிறுதியில் உலக சாம்பியனான கனடாவின் லின்டாவை தோற்கடித்தார். பைனலில் நைஜீரியாவின் ஒடுனாயோவிடம் வீழ்ந்த அன்சு மாலிக் வெள்ளி வென்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement