Advertisement

'கேலோ' இந்தியா: தனுஷ் தங்கம்

கவுகாத்தி: 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' நீச்சல் போட்டிக்கான 100 மீ., 'பிரெஸ்ட்ஸ்டிரோக்' (21 வயது) பிரிவில் தமிழக வீரர் தனுஷ் தங்கம் வென்றார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' 3வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்கள் (21 வயது) நீச்சல் போட்டிக்கான 100 மீ., 'பிரெஸ்ட்ஸ்டிரோக்' பிரிவில் இலக்கை ஒரு நிமிடம், 03.71 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த தமிழகத்தின் தனுஷ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்கள் (21 வயது) நீச்சல் போட்டிக்கான 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை 2 நிமிடம், 22.97 வினாடியில் கடந்த தமிழகத்தின் பாவிகா துகர் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர், 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவிலும் 2வது இடம் (10 நிமிடம், 13.78 வினாடி) பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் (21 வயது) நீச்சல் போட்டிக்கான 50 மீ., 'பட்டர்பிளே' பிரிவில் இலக்கை 26.03 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்த தமிழகத்தின் ஆதித்யா வெள்ளி வென்றார். ஆண்கள் (17 வயது) நீச்சல் போட்டிக்கான 100 மீ., 'பிரெஸ்ட்ஸ்டிரோக்' பிரிவில் இலக்கை ஒரு நிமிடம், 8.56 வினாடியில் கடந்த தமிழகத்தின் ரோகித் பெனடிக்சன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான (17 வயது) பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் தமிழகத்தின் ரிதிகா வெண்கலம் கைப்பற்றினார்.

பதக்கப்பட்டியலில் தமிழக அணி 10 தங்கம், 22 வெள்ளி, 12 வெண்கலம் என, 44 பதக்கங்களுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் மஹாராஷ்டிரா அணி (42 தங்கம், 43 வெள்ளி, 65 வெண்கலம்) உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement