Advertisement

'கேலோ' இந்தியா: தமிழக அணி வெற்றி

கவுகாத்தி: 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி 80-30 என, ஹரியானாவை வீழ்த்தியது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' 3வது சீசன் நடக்கிறது. இதில் பெண்களுக்கான (17 வயது) கூடைப்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 80-30 (26-10, 25-8, 12-7, 17-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்களுக்கான (21 வயது) கூடைப்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. இதில் தமிழக அணி 89-25 (24-8, 21-7, 29-7, 15-0) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கால்பந்து: பெண்களுக்கான (21 வயது) கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதின. இதில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழகம் சார்பில் மில்சியா (15வது நிமிடம்), பாண்டிச் செல்வி (68வது) தலா ஒரு கோலடித்தனர். மேற்கு வங்க அணிக்கு டிட்லி சர்கார் (19வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

பதக்கப்பட்டியலில் தமிழக அணி 9 தங்கம், 18 வெள்ளி, 11 வெண்கலம் என, 38 பதக்கங்களுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் மஹாராஷ்டிரா (34 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலம்) உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement