Advertisement

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இரண்டாவது மோதல்

Share

ராஜ்கோட்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் எழுச்சி பெற்று இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

மீண்டும் 'நம்பர்-3'

துவக்கத்தில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் களமிறங்க காத்திருக்கிறது. முதல் போட்டியில் ஏமாற்றிய ரோகித் சுதாரித்து கொள்ளலாம். கடந்த முறை 4வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் கோஹ்லி, இன்று தனது வழக்கமான 3வது இடத்தில் வருகிறார். இவர் இன்று ரன் மழை பொழிவார் என நம்பப்படுகிறது.

ராகுல் உறுதி

ரிஷாப் பன்ட் காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்வது உறுதி. இவருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் நம்பிக்கை தர வேண்டும். பின் வரிசையில் ரிஷாப் இடத்தில் 6வது பவுலராக 'ஆல் ரவுண்டர்கள்' கேதர் ஜாதவ் அல்லது ஷிவம் துபே இடம் பெறலாம். அல்லது மணிஷ் பாண்டே சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

பும்ரா எதிர்பார்ப்பு

காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (3 போட்டி, 2 விக்.,) சிறப்பாக செயல்படவில்லை. இன்று எழுச்சி பெற்றால் நல்லது. இவருடன் முகமது ஷமி விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது. முதல் போட்டியில் 5 ஓவரில் 43 ரன்கள் வாரி வழங்கிய ஷர்துல் தாகூருக்குப் பதில் நவ்தீப் சைனி இடம் பெறலாம். ஜடேஜாவுடன் சுழலில் இன்று சகால் சேர்க்கப்படுவார் என நம்பப்படுகிறது.

பேட்டிங் பலம்

ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங்கில் மிரட்டுகிறது. மும்பையில் சதம் விளாசிய கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி மீண்டும் ரன் சேர்க்க முயற்சிக்கலாம். கடைசியாக இந்திய அணிக்கு எதிராக பங்கேற்ற 5 போட்டிகளில் துவக்க விக்கெட்டுக்கு 70, 231, 66, 61, 258 ரன்கள் எடுத்துள்ளது இந்த ஜோடி. அடுத்து லபுசேன், அனுபவ ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப் காத்திருக்கின்றனர்.

பவுலிங்கில் மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் கூட்டணி பெரும் தொல்லையாக உள்ளது. சுழலில் ஆடம் ஜாம்பா, ஆஷ்டன் ஏகார் ஜோடி அதிக ரன்களை விட்டுத்தருவது இந்தியாவுக்கு ஆறுதல் தான்.ஆடுகளம் எப்படி

ராஜ்கோட் ஆடுகளம் நன்கு காய்ந்து காணப்படுகிறது. மும்பையை போல பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

* இந்திய அணி இங்கு பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து) 'சேஸ்' செய்து தோற்றுள்ளது.4

கடந்த ஆண்டு 3, தற்போது மும்பை என ஆஸ்திரேலியாவிடம் தொடர்ந்து 4 போட்டியில் இந்திய அணி சொந்தமண்ணில் தோற்றது. இதற்கு முன் 1983-87ல் விண்டீசிடம் 9, 1988ல் 5 முறை என தொடர்ந்து இந்தியா தோற்றது.மழை வாய்ப்பு

இரண்டாவது போட்டி நடக்கும் ராஜ்கோட்டில் இன்று வானம் தெளிவாக இருக்கும். மழை வர வாய்ப்பில்லை என்பதால் விறுவிறு மோதல் காத்திருக்கிறது.துணிச்சலாக போராடும்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் கூறுகையில்,''இந்திய அணி சிறப்பானது. உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். இன்று கடுமையாக, துணிந்து போராடுவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை,'' என்றார்.ஸ்ரேயாஸ் உறுதி

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில்,''இப்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் அணியின் வெற்றிக்காகத் தான் விளையாடுகிறோம்,'' என்றார்.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement