Advertisement

மீண்டும் சாதிக்குமா இளம் இந்தியா

Share

கிம்பெர்லி: ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயது) கிரிக்கெட் தொடரில், பிரியம் கார்க் தலைமையிலான இளம் இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் ஜன. 17ல் துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதியில் (ஜன. 28-31) விளையாடும். இதில் வெல்லும் அணிகள் அரையிறுதியில் (பிப். 4, 6) மோதும். பைனல், பிப். 9ல் நடக்கவுள்ளது.

நான்கு பிரிவு: இந்திய அணி 'ஏ' பிரிவில் இலங்கை, ஜப்பான், நியூசிலாந்துடன் உள்ளது. 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, விண்டீஸ் அணிகள் உள்ளன. 'சி' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும், 'டி' பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

கிம்பெர்லியில் நடக்கும் முதல் போட்டியில் (ஜன. 17) 'டி' பிரிவில் உள்ள தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை வரும் 19ல் எதிர்கொள்கிறது. அதன்பின் ஜப்பான் (ஜன. 21), நியூசிலாந்து (ஜன. 24) அணிகளை சந்திக்கிறது.

கோப்பை வாய்ப்பு: இந்திய அணி மீண்டும் கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த 2018ல் நடந்த உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி தொடர்ச்சியாக 7 தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. இதில் ஆசிய கோப்பை (2018-வங்கதேசம், 2019-இலங்கை), முத்தரப்பு (2019, இங்கிலாந்து), நான்கு நாடுகள் (2019, தென் ஆப்ரிக்கா) தொடர்கள் அடங்கும்.

இந்திய அணிக்கு 'பேட்டிங்கில்' கேப்டன் பிரியம் கார்க், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். 'பவுலிங்கில்' பயிற்சியில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த கார்த்திக் தியாகி, அதர்வா, ரவி பிஷ்னாய், வித்யாதர் பாட்டீல் கைகொடுக்கலாம்.

இதுவரை சாம்பியன்

அதிக முறை உலக கோப்பை (19 வயது) வென்ற அணிகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி 4 முறை (2000, 2008, 2012, 2018) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா 3 (1988, 2002, 2010), பாகிஸ்தான் 2 (2004, 2006), தென் ஆப்ரிக்கா (2014), விண்டீஸ் (2016), இங்கிலாந்து (1998) தலா ஒரு முறை கோப்பை வென்றன.



13வது முறை

இந்திய அணி 13வது முறையாக உலக கோப்பையில் (19 வயது) விளையாடுகிறது. முன்னதாக பங்கேற்ற 12 தொடர்களில் 4 முறை கோப்பை வென்ற இந்தியா (2000, 2008, 2012, 2018), 2 முறை (2006, 2016) பைனலுக்கு முன்னேறியது. இரு முறை 3 (2002, 2004), 5 (1998, 2014), 6வது (1988, 2010) இடங்களை பிடித்தது.



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement