Advertisement

நான்காம் நாள் ஆட்டம் ரத்து

ராவல்பிண்டி: இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயா (87), தில்ருவன் பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடப்பதாக இருந்தது. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக, மைதானத்தின் சில பகுதிகளில் நீர் தேங்கி இருந்தது. இதனுடன், போதிய வெளிச்சமின்மை சிக்கலை தந்தது. ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் நான்காம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மழை வாய்ப்பு குறைவு என்றாலும், போட்டி 'டிராவில்' முடியலாம்.







Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement