Advertisement

வலுவான நிலையில் ஆஸி.,

Share

பெர்த்: நியூசிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக பெர்த்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ராஸ் டெய்லர் 80 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோமை (23) வெளியேற்றிய ஸ்டார்க், ஐந்தாவது விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

லபுசேன் அரை சதம்

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (19) விரைவில் திரும்பினார். ஜோ பார்ன்ஸ் (53), லபுசேன் (50) அரை சதம் அடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் (16) நிலைக்கவில்லை. சவுத்தீ 'வேகத்தில்' ஹெட் (5), கேப்டன் பெய்ன் (0) சிக்கினர். ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து, 417 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வேட் (8), கம்மின்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக சவுத்தீ 4 விக்கெட் வீழ்த்தினார்.

அம்பயர் காயம்

இப்போட்டியில் பாகிஸ்தானின் அலீம் தர், அதிக டெஸ்ட் போட்டிகளில் (129) அம்பயராக இருந்தவர் என்ற பெருமை பெற்றார். நேற்றைய ஆட்டத்தில், நியூசிலாந்தின் சவுத்தீ வீசிய 35வது ஓவரின் நான்காவது பந்தை லபுபேன் அடித்தார். பந்தை சவுத்தீ பிடித்து, மறுமுனையில் இருந்து ஓடிவந்த பார்ன்சை ரன் அவுட் செய்ய எறிந்தார். இதிலிருந்து தப்பிக்க அம்பயர் அலீம் தர் முயற்சி செய்தார். ஓவர் 'த்ரோ' ஆகாமல் இருக்க, நியூசிலாந்து பீல்டர் சான்ட்னரும் 'ஸ்டம்ப்சை' நோக்கி ஓடி வந்தார். இருவரும் மோதிக்கொண்டதில் அலீம் தர் முழங்காலில் காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே வலி காரணமாக அவதிப்பட்ட இவருக்கு சிகிச்சை தரப்பட்டது. பின், சகஜநிலைக்கு வந்தார்.

...................



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement