Advertisement

கோல்கட்டா கலக்கல் வெற்றி

Share

கவுகாத்தி: வட கிழக்கு அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோல்கட்டா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, வட கிழக்கு யுனைடெட் அணியை எதிர் கொண்டது. துவக்கம் முதலே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி ஆதிக்கம் செலுத்தியது. 11வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் கோல்கட்டா அணிக்கு கோல் கணக்கை துவக்கினார். 35வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா தன் பங்கிற்கு கைகொடுக்க, முதல் பாதியில் கோல்கட்டா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் வட கிழக்கு அணியால் எழுச்சி பெற முடியவில்லை. இதனால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 90வது நிமிடத்தில் ஜாபி தந்த பந்தை பெற்ற கோல்கட்டாவின் ராய் கிருஷ்ணா இரண்டாவது கோலை பதிவு செய்தார். முடிவில், கோல்கட்டா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்துள்ள 7 லீக் போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி, 2 'டிரா' என 14 புள்ளிகளுடன் கோல்கட்டா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement