Advertisement

11 வயதில் டென்னிஸ்

Share

பாரிஸ்: டென்மார்க் டென்னிஸ் நட்சத்திரம் கரோலினா வோஸ்னியாக்கி 29. முன்னாள் 'நம்பர்-1' வீராங்கனையான இவர், 2017ல் டபிள்யு.டி.ஏ.,பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வசப்படுத்தினார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஒரு முறை (2018, ஆஸி., ஓபன்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 20ல் துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

இவருடன் விளையாடிய நாட்கள் குறித்து பிரான்சின் அலைஸ் கார்னெட் 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,' நீங்களும் நானும் முதல் முறையாக 11 வயதில் விளையாடினோம். மூன்றரை மணி நேரம் விளையாடிய அந்த நினைவுகள் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது. சாம்பியனாக நீங்கள் உருவெடுத்ததை எண்ணிப்பார்க்கிறேன். ஒய்வுக்குப்பின் உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,' என, தெரிவித்துள்ளார். இத்துடன் வோஸ்னியாக்கியின் சிறு வயது புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement