Advertisement

தமிழக 'தங்கம்' அனுராதா: தெற்காசிய விளையாட்டில் அபாரம்

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டில் பெண்களுக்கான பளுதுாக்குதல் 87 கி.கி., பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்றார். இந்திய அணி 200 பதக்கங்களுக்கு அதிகமாக வென்றுள்ளது.

நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்களுக்கான பளுதுாக்குதல் 87 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் அனுராதா பவுன்ராஜ் ஜொலித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 90 கி.கி., மற்றும் 'கிளின் அன்ட் ஜெர்க்' பிரிவில் 110 கி.கி., துாக்கினார். மொத்தம் 200 கி.கி., துாக்கிய இவர் தங்கத்தை தனதாக்கினார்.

பெண்கள் பளுதுாக்குதல் 81 கி.கி., பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை சாஸ்திரி சிங் (190 கி.கி.,) தங்கம் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான வாள்சண்டை 'பாய்ல்'பிரிவில் தமிழகத்தின் வினோத் குமார் வேலாயுதம் தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். ஆண்களுக்கான 'ரோடு ரேஸ்' சைக்கிள்பந்தயத்தில் இந்திய வீரர் சட்பிர் சிங், இலக்கை இரண்டு மணி நேரம் 48 நிமிடம் 40.067 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஷிவ்பால் சிங், 84.16 மீ., துாரம் எறிந்து வெள்ளி வென்றார்.

லில்லி வெண்கலம்

பெண்கள் 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லில்லி தாஸ் இரண்டு நிமிடம் 08.97 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

ஆண்களுக்கான 4*400 மீ., 'ரிலே' பிரிவில் ஜீவன், சந்தோஷ் குமார், அன்கிரிஜ் சிங், ஜபிர் அடங்கிய இந்திய அணி மூன்று நிமிடம் 08.21 வினாடியில் கடந்து வெள்ளி கைப்பற்றியது.

மாரத்தானில் வெள்ளி

ஆண்கள் மாரத்தான் ஓட்டத்தில் இந்தியாவின் ராஷ்பால் சிங், இலக்கை இரண்டு மணி நேரம் 21 நிமிடம் 57 வினாடியில் கடந்து வெள்ளி கைப்பற்றினார். சக வீரர் ஸ்ரீ சிங், இரண்டு மணி நேரம் 22 நிமிடம் 07 வினாடியில் கடந்து வெண்கலத்தை வசப்படுத்தினார்.

பெண்கள் மாரத்தான் போட்டியில் இந்தியாவின் ஜோதி, பந்தய துாரத்தை இரண்டு மணி நேரம் 52 நிமிடம் 44 வினாடியில் கடந்து வெண்கலம் கைப்பற்றினார்.

ஆண்கள் 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அப்சல், இலக்கை ஒரு நிமிடம் 51.25 வினாடியில் எட்டி வெள்ளி கைப்பற்றினார்.

பைனலில் கபடி அணி

ஆண்களுக்கான கபடியில் இந்திய அணி முதலிரண்டு லீக் போட்டிகளில் (எதிர்- இலங்கை, பாகிஸ்தான்) வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 44-19 என வீழ்த்தியது. இதன் மூலம், பைனலுக்குள் நுழைந்தது.

கால்பந்தில் அபாரம்

பெண்கள் கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 1-0 என வீழ்த்தியது. ஏற்கனவே, மாலத்தீவு, இலங்கை அணியை வென்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது.

முதலிடம்



ஆறு நாட்கள் முடிவில், 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 214 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் (142) நேபாளம் உள்ளது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement