புதுடில்லி: ''எனக்குப் பதில் இளம் தலைமுறை வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற வேண்டும்,'' என லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.
இந்திய டென்னிஸ் அரங்கின் சீனியர் வீரர் பயஸ் 46. ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றவர். டேவிஸ் கோப்பை தொடரில் இரட்டையர் போட்டியில் 44 வெற்றி பெற்று சாதித்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடரில் இடம் பெற்றார்.
இதில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எதிர்காலம் குறித்து பயஸ் கூறியது:
எனது அனுபவம் தான் இப்போது வரையில் கொண்டு வந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் அணியின் நலனை கருத்தில் கொள்ளும் பட்சத்தில், நான் அடுத்த ஆண்டு விளையாடக் கூடாது.
ஏனெனில் இப்போதே எனக்கு 46 வயதாகி விட்டது. இனிமேலும் நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது. இளம் தலைமுறையினர் வந்தாக வேண்டும். இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும். இளம் அணியினை தயார் செய்வது முக்கியம்.
இவ்வாறு பயஸ் கூறினார்.
ஓய்வு பெறுகிறாரா பயஸ் * இளம் தலைமுறைக்கு வரவேற்பு
வாசகர் கருத்து (1)
நாற்பத்தியாறு வயது வரைக்கும் விளையாடியுள்ளீர்கள் ... இன்றும் உங்களது இடத்தை நிரப்ப வேறு வீரர்களை உருவாக்காத விளையாட்டு ஆணையத்தை களைத்து விட வேண்டும் ... உங்கள் பங்களிப்பு ஈடு இணையற்றது .... தேசத்திற்க்காக அதிகம் வெற்றிகளை தந்துள்ளீர்கள் ...நன்றி பயஸ் ...