Advertisement

டிரையாத்லானில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

பொகாரா: தெற்காசிய விளையாட்டு டிரையாத்லான் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷா சினிமோல் தங்கம் வென்றார்.

நேபாளத்தில், 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. பொகாரா நகரில் டிரையாத்லான் போட்டிகள் நடந்தன. இதில் 750 மீ., நீச்சல், 20 கி.மீ., சைக்கிள் பந்தயம் மற்றும் 5 கி.மீ., ஓட்டம் என, 3 வகையான போட்டிகள் நடத்தப்படும். இம்மூன்று போட்டிக்கான இலக்கை முதலில் நிறைவு செய்யும் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

சினிமோல் தங்கம்: ஆண்களுக்கான 'டிரையாத்லான்' போட்டியில் இந்தியாவின் ஆதர்ஷா எம்.என். சினிமோல், இலக்கை ஒரு மணி நேரம், 2 நிமிடம், 51 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிஷ்வர்ஜித் ஸ்ரீகோம் (1 மணி நேரம், 2 நிமிடம், 59 வினாடி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 'டிரையாத்லான்' போட்டியில் இந்தியாவின் சரோஜினி தேவி, இலக்கை ஒரு மணி நேரம், 14 நிமிடத்தில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மோகன் பிரக்னியா (ஒரு மணி நேரம், 14 நிமிடம், 57 வினாடி) 3வது இடம் பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார்.

டேக்வான்டோ: கலப்பு இரட்டையர் பிரிவு (23-29 வயது) டேக்வான்டோ போட்டியில் 8.310 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கவுரவ் சிங், ஹர்ஷா சிங்கா ஜோடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆண்கள் அணிகளுக்கான (17-23 வயது) டேக்வான்டோ போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

டேக்வான்டோ போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என, 10 பதக்கம் கிடைத்தது.

கோ-கோ: ஆண்களுக்கான 'கோ-கோ' லீக் போட்டியில் இந்திய அணி 17-5 என, நேபாளத்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 12-10 என, வங்கதேசத்தை தோற்கடித்தது. ஏற்கனவே இலங்கையை வீழ்த்திய இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் (டிச. 3) இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement