Advertisement

தமிழக அணி தோல்வி

Share

நத்தம்: விஜய் மெர்ச்சன்ட் டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (16 வயது, மூன்று நாள் போட்டி) தொடரின் 88வது சீசன் நடக்கிறது. நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின.

முதல் இன்னிங்சில் ஐதராபாத் 261, தமிழகம் 127 ரன்கள் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சிங் 3 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்து, 180 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

நேற்று மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஐதராபாத் அணி 105/8 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. அடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு சுருண்டது. 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.



Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement