Advertisement

கபில் போல வருமா... * வேகமாக தயாராகும் '83'

புதுடில்லி: இந்திய அணியின் உலக கோப்பை வெற்றிப் பயணம் தொடர்பான '83' படத்தில் எடுக்கப்பட்ட 'ஸ்டில்' ஒன்று வெளியானது. இதில் கபில்தேவ் போல நடிகர் ரன்வீர் சிங் 'பேட்' செய்யும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், 60. கடந்த 1983 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு முதன் முறையாக உலக கோப்பை வென்று தந்தார். இது தொடர்பாக ஹிந்தியில் '83' என்ற பெயரில் சினிமா தயாராகி வருகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இதனிடையே ரன்வீர் சிங் தனது 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் '83' படத்தில் 'ஸ்டில்' ஒன்றைய வெளியிட்டார். இதில் கபில்தேவின் பிரபலமான ஒரு காலை உயர்த்தி, 'நடராஜர்' நடனம் ஆடுவது போன்ற தோற்றத்தில் 'ஷாட்' அடிக்கிறார். பார்ப்பதற்கு அப்படியே கபில்தேவ் போல உள்ளார். இதற்காக ரன்வீர் சிங்கை கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement