Advertisement

இந்துாரில் இந்திய அணி * டெஸ்ட் தொடருக்கு தயார்

Share

இந்துார்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் இந்துார் வந்தடைந்தனர்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 14ம் தேதி இந்துாரில் துவங்க உள்ளது. இதனிடையே இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி 'டுவென்டி-20' போட்டி நாக்பூரில் நடந்தது.

இதில் இந்தியா வென்றது. இதையடுத்து இந்தியா, வங்கேதச அணியில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், நாக்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பினர்.

அங்கிருந்து இந்துாரில் உள்ள தேவி அகில்யாபாய் ஹோல்டர் விமானநிலையம் வந்தனர். இங்கிருந்து தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டல்களுக்கு இரு அணி வீரர்களும் சென்றனர். வீரர்களை காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement