Advertisement

என்ன சமையலோ... * கேப்டன் கோஹ்லி ருசிகரம்

புதுடில்லி: ''ஓய்வுக்குப் பின் சமையல் கலையை கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளது,'' என கோஹ்லி தெரிவித்தார்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி 31. வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட இவர், டெஸ்ட் தொடரில் களமிறங்க காத்திருக்கிறார். இவர் அளித்த பேட்டி:

சிறுவயதில் இருந்த உணவுப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவன். அனைத்து வகை உணவுகளையும் விரும்புவேன். அதிகமான 'ஜங்க் புட்' உணவுகளை சாப்பிடுவேன். சிக்கன், பட்டர் சிக்கன், நான், பீன்ஸ் குருமா, சோழா பூரி மற்றும் தெருவோர கடைகளில் பிடித்ததை சாப்பிட்டுள்ளேன்.

சமையல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சுவைகள் குறித்து நன்கு தெரியும். தவிர ஒரு உணவு எப்படி சிறப்பான முறையில் சமைக்கப்படுகிறது எனவும் தெரிந்து வைத்துள்ளேன். இதனால் என்னால் சமைக்க கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் சமையலில் கவனம் செலுத்துவேன்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement