Advertisement

'ஐயம் விராட் கோஹ்லி' * டேவிட் வார்னர் மகள் லட்சியம்

புதுடில்லி: டேவிட் வார்னரின் மகள் இவி மே, இந்திய அணியின் கோஹ்லி போல வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னர் 33. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இவரது மனைவி கேண்டிஸ் வார்னர். தனது 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், மகள் இவி மே, கிரிக்கெட் விளையாடுவது போல உள்ளது. அப்போது, 'ஐயம் விராட் கோஹ்லி' என்கிறார்.

அதாவது அப்பா வார்னர் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்த போதும், இந்தியாவின் கோஹ்லியைப் போல வர வேண்டும் என்கிறார். இதுகுறித்து வார்னர் மனைவி கேண்டிஸ் கூறுகையில்,''எங்கள் மகள் இவி மே, இந்தியாவில் அதிக நாட்கள் தங்கியிருந்தார். இதனால் கோஹ்லி போல வரவேண்டும் என தெரிவித்துள்ளார்,'' என்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement