Advertisement

சவுரப் சவுத்ரி வெள்ளி *ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்

Share

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. ஆண்கள் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட இந்தியாவின் 17 வயது வீரர் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா களமிறங்கினர்.

தகுதிச்சுற்றில் அபிஷேக் 6வது, சவுரப் சவுத்ரி 7வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி, பைனலில் 244.5 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

வட கொரியாவின் கிம் சங் குக் (246.5) உலக சாதனையுடன் தங்கம் தட்டிச் சென்றார். அபிஷேக் (181.5) ஐந்தாவது இடம் பெற்று ஏமாற்றினார்.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement