Advertisement

தீபக் சகார் 'நம்பர்–42': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., சர்வதேச 'டுவென்டி-20' பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் 42வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார், 130வது இடத்தில் இருந்து 42வது இடத்துக்கு முன்னேறினார். இவர், நாக்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் 'ஹாட்ரிக்' உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார். தவிர இத்தொடரில் அதிகபட்சமாக 8 விக்கெட் கைப்பற்றிய இவர், தொடர் நாயகன் விருது வென்றார்.

மற்ற இந்திய வீரர்களான குல்தீப் யாதவ் (14வது இடம்), குர்னால் பாண்ட்யா (18வது), யுவேந்திர சகால் (25வது) ஆகியோர் 'டாப்-25' பட்டியலில் உள்ளனர்.

முதல் மூன்று இடங்களில் முறையே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நியூசிலாந்தின் மிட்சல் சான்ட்னர், பாகிஸ்தானின் இமாத் வாசிம் நீடிக்கின்றனர்.

ரோகித் 'நம்பர்-7': பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 7வது இடத்தில் நீடிக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் அரைசதமடித்த இந்தியாவின் லோகேஷ் ராகுல் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல் மூன்று இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இங்கிலாந்தின் டேவிட் மாலன் தொடர்கின்றனர்.

இந்தியா 'நம்பர்-5': சர்வதேச 'டுவென்டி-20' அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 5வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் முறையே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement