Advertisement

இந்திய பெண்கள் மீண்டும் வெற்றி

Share

செயின்ட் லுாசியா: விண்டீசுக்கு எதிரான 2வது 'டுவென்டி-20' போட்டியில் ஷபாலி வர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது.

'டாஸ்' வென்று 'பேட்டிங்' செய்த விண்டீஸ் அணிக்கு செடீன் நேஷன் (32), ஹேலி மாத்யூஸ் (23), நடாஷா மெக்லீன் (17) ஆறுதல் தந்தனர். ஸ்டேசி-ஆன் சிங் (7), ஷிமைன் கேம்ப்பெல் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, விண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஷபாலி விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய ஷபாலி அரைசதம் கடந்தார். இந்திய அணி 10.3 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி (69), மந்தனா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகி விருதை தீப்தி சர்மா வென்றார். இந்திய அணி 2-0 என, முன்னிலை பெற்றது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement