Advertisement

பகலிரவு டெஸ்டில் ஆனந்த்

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு செஸ் நட்சத்திரங்கள் ஆனந்த், கார்ல்சன் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முதன் முறையாக பகலிரவு டெஸ்ட், வரும் நவ. 22-26ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம் மோதும் இப்போட்டியை சிறப்பாக நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்கிறார் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவர் கங்குலி. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மணி அடித்து போட்டியை துவக்க வைக்க உள்ளார். பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டி துவக்கத்தில் முன்னாள் இந்திய கேப்டன்கள் இணைந்து தேசிய கீதம் பாடுவது, அபினவ் பிந்த்ரா (துப்பாக்கிசுடுதல்), சானியா மிர்சா (டென்னிஸ்), சிந்து (பாட்மின்டன்), மேரிகோமுக்கு (குத்துச்சண்டை) கவுரவம், சச்சின் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்களுக்கு கவுரவம் என பல நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

போட்டி நாட்களில் கோல்கட்டாவில் 'டாடா ஸ்டீல் செஸ் இந்தியா' தொடர் (நவ. 22-26) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வரும் இந்தியாவின் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சனுக்கு (நார்வே) பி.சி.சி.ஐ., அழைப்பு விடுத்துள்ளது. ஆனந்த் வருவதை உறுதி செய்துள்ளார். கார்ல்சனும் வரும் பட்சத்தில் இருவரும் ஏதாவது ஒருநாளில் ஈடன் கார்டன் மைதானம் வந்து, மணி அடித்து போட்டியை துவக்கி வைப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement