Advertisement

வங்கதேச வீரர்கள் போர்க்கொடி: இந்திய தொடருக்கு சிக்கல்?

தாகா: சம்பள உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வங்கதேச வீரர்கள் 'ஸ்டிரைக்' செய்ய உள்ளதால் இந்திய தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல்., பாணியில் வங்கதேச பிரிமியர் லீக் (பி.பி.எல்.,) தொடர் நடந்தது. இதில் அதிக சூதாட்டம், ஊழல் அதிகரித்ததாக, உரிமையாளர்கள் தொடரை நடத்தும் முறையை வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ரத்து செய்தது. இதனால் வீரர்கள் வருமானம் பெருமளவு குறைந்தது. இதனிடையே தாகாவில் டெஸ்ட், 'டுவென்டி-20' அணி கேப்டன் சாகிப் அல் ஹசன், மகமதுல்லா, முஷ்பிகுர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி வீரர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில்,'பி.பி.எல்., தொடரை மீண்டும் தனியார் உரிமையாளர்களை கொண்டு நடத்துவது, வீரர்களுக்காக சம்பள ஒப்பந்த பணத்தை அதிகரிப்பது, ஒப்பந்த பட்டியலில் அதிக வீரர்கள் சேர்ப்பது,' உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுத்தி பேசினர். இதை வங்கதேச கிரிக்கெட் போர்டு நிறைவேற்றும் வரை, கிரிக்கெட் தொடர்பான எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதனால் வரும் நவம்பர் மாதம் இந்தியா மண்ணில், வங்கதேச அணி பங்கேற்கும் மூன்று 'டுவென்டி-20', இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை முன்னணி வீரர்கள் வருவரா, இரண்டாம் தர அணி அனுப்பப்படுமா அல்லது தொடரே ரத்தாகும் நிலை வருமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement