Advertisement

வங்கதேச தொடர்: கோஹ்லி ஓய்வு

புதுடில்லி: வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் இந்திய கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படும் எனத்தெரிகிறது.

இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் நவம்பர் 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் ராஜ்கோட் (நவ. 7), நாக்பூரில் (நவ. 10) நடக்கும். இதற்கான இந்திய அணி தேர்வு வரும் 24ல் மும்பையில் நடக்கவுள்ளது.

இதில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படும் எனத்தெரிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை நடந்துள்ள 56 சர்வதேச போட்டிகளில் கோஹ்லி 48 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் காரணமாக, இவருக்கு ஓய்வு தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பதால், வங்கதேச 'டுவென்டி-20' தொடரில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படலாம். அதே நேரம், உடற்தகுதி குறித்து கோஹ்லிதான் முடிவு செய்ய வேண்டும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முடிந்தபின், தேர்வுக்குழுவினருடன் இவர் பேச வாய்ப்புள்ளது,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement