Advertisement

தமிழ் தலைவாஸ் கடைசி இடம் * 15 தோல்வி பெற்று ஏமாற்றம்

Share

கிரேட்டர் நொய்டா: புரோ கபடி தொடரில் தோல்வியுடன் விடைபெற்றது தமிழ் தலைவாஸ் அணி. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் 29-33 என கோல்கட்டாவிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் புரோ கபடி தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் டில்லி, கோல்கட்டா, ஹரியானா, மும்பை, பெங்களூரு மற்றும் உ.பி., அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் நேற்று கோல்கட்டாவை (பெங்கால் வாரியர்ஸ்) எதிர்கொண்டது. முதல் பாதி 13-13 என சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் வழக்கம் போல சொதப்பிய தமிழ் தலைவாஸ் அணி, 29-33 என வீழ்ந்தது.

இதற்கு முன் பங்கேற்ற 5வது சீசனில் 6 வெற்றி, 6 வது சீசனில் 5 வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ், இம்முறை பங்கேற்ற 22 போட்டியில் 4ல் மட்டும் வென்று (15 தோல்வி, 3 'டை'), கடைசி இடம் (37 புள்ளி) பிடித்து ஏமாற்றம் அளித்தது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஐதராபாத் அணி 41-36 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி., அணியை வென்றது.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement