Advertisement

உலக செஸ்: பிரக்னநந்தா வெற்றி

மும்பை: உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் எட்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரக்னநந்தா, சக வீரர் இனியனை வீழ்த்தினார்.

மும்பையில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் இளம் பிரக்னநந்தா பங்கேற்கிறார்.

முதல் ஏழு சுற்றில் நான்கு வெற்றி, மூன்று 'டிரா' செய்த இவர், 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார். வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரக்னநந்தா, எட்டாவது சுற்றில் சக வீரர் இனியனை சந்தித்தார்.

இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்னநந்தா, போட்டியின் 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதுவரை முடிந்த எட்டு சுற்று முடிவில் பிரக்னநந்தா 6.5 புள்ளிகள் பெற்று, ஈரான் வீரர் கொலாமி ஆர்யனுடன் (6.5) முதலிடத்தில் உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement