Advertisement

நிர்மலாவுக்கு 4 ஆண்டு தடை

மொனாகோ: இந்திய தடகள வீராங்கனை நிர்மலா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிரியானாவை சேர்ந்தவர் நிர்மலா ஷிரோயின், 24. கடந்த 2017ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில், 400 மீ., மற்றும் 4*400 மீ., ரிலே பிரிவில் தங்கம் வென்றார். கடந்த 2018ல் கவுகாத்தியில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இவரது சிறுநீர் மாதிரியில் டிரஸ்டானாலன், மெட்டனாலன் என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருந்தது தெரியவந்தது.

பதக்கம் பறிப்பு

இந்நிலையில், சர்வதேச தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்ட தடகள நேர்மை மையம்(ஏ.ஐ.யு.,) சார்பில் நிர்மலாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் கடந்த ஜூன் 2018 முதல் கணக்கிடப்படும். கடந்த ஆகஸ்ட் 2016 முதல் ஜூன் 2018 வரை நிர்மலா பெற்ற வெற்றிகள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளன. ஆசிய சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற இரண்டு தங்கப்பதக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சர்வதேச தடகள கூட்டமைப்பு 'டுவிட்டரில்' வெளியிட்ட அறிக்கையில்,'இந்திய தடகள வீராங்கனை நிர்மலா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளார். இவருக்கு நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை நிர்மலா ஏற்றுக்கொண்டார்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement