Advertisement

ரொனால்டோ சாதனை

வில்னியஸ்: 'யூரோ' கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார் ரொனால்டோ.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் 2020ல் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடக்கின்றன. 'பி' பிரிவில் போர்ச்சுகல், உக்ரைன், லிதுவேனியா, செர்பியா, லக்சம்பர்க் அணிகள் இடம் பெற்றுள்ளன.

லிதுவேனியாவின் வில்னியஸ் பகுதியில் நடந்த போட்டியில் போர்ச்சுகல், லிதுவேனியா மோதின. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மிரட்டினார். 7வது நிமிடத்தில் அணிக்கு கிடைத்த 'பெனால்டி கிக்' வாய்ப்பில் இவர் முதல் கோல் பதிவு செய்தார். லிதுவேனியா சார்பில் வியாடஸ் (28 வது) பதிலடி தந்தார்.

இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற ரொனால்டோ, 61, 65வது நிமிடத்தில் கைகொடுத்து, 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். சீற்றம் குறையாத இவர், நான்காவது கோல் (76வது நிமிடம்) அடித்தார். கடைசி நேரத்தில் (90+2) வில்லியம் கைகொடுக்க, போர்ச்சுகல் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நான்கு கோல் அடித்த ரொனால்டோ, 'யூரோ' கோப்பை தகுதிச்சுற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை 25 கோல் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் அயர்லாந்தின் ராபி கேன் (23) வகிக்கிறார்.

* ஐரோப்பிய அரங்கில் அதிக கோல் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில், ரொனால்டோ (93 கோல், 160 போட்டி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement