Advertisement

உலக செஸ்: நிகால் ஷரின் வெற்றி

கண்டி மான்சிஸ்க்: உலக கோப்பை செஸ் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் நிகால் ஷரின், அதிபன், ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ரஷ்யாவில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. 'நாக் அவுட்' முறையில் நடக்கும் இத்தொடரில் இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் இந்திய இளம் வீரர் நிகால் ஷரின் 15, பெருவின் ஜார்ஜ் கோரியை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நிகால் ஷரின், போட்டியின் 57வது நகர்த்தலில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அதிபன், வெனிசுலாவின் எடுவர்டோவை வென்றார். ஹரிகிருஷ்ணா, கியூபாவின் கொன்சாலஸ் விடாலை வீழ்த்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement