Advertisement

சாகேத் மைனேனி ஏமாற்றம்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் சாகேத் மைனேனி தோல்வியடைந்தார்.

சீனாவில், ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஜப்பானின் ஷுய்சி செகிகுச்சி மோதினர். இரண்டு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மைனேனி 6-4, 3-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணு வர்தன் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் கோலின் அல்டாமிரானோ, உக்ரைனின் விலாடிஸ்லாவ் ஆர்லோவ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்பெயினின் என்ரிக் லோபஸ் பெரஸ் ஜோடி மற்றும் இந்தியாவின் அர்ஜுன் காடே, விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி தோல்வியடைந்து வெளியேறின.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement