Advertisement

ராம்குமார் ராமநாதன் வெற்றி

இஸ்தான்புல்: துருக்கியில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், துருக்கியின் மார்செல் இல்ஹான் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ராம்குமார், 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார்.

மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராம்குமார் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் புரவ் ராஜா, ஆஸ்திரேலியாவின் ரமீஸ் ஜுனைடு ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் ரூபென் பெமெல்மன்ஸ், செர்பியாவின் நினத் ஜிமான்ஜிக் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement