Advertisement

புரோ கபடி பைனல் எங்கே

புதுடில்லி: புரோ கபடி தொடரின் 'பிளே ஆப்' போட்டிகள் மற்றும் பைனல், ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் புரோ கபடி தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதும் இத்தொடரின் மூன்றில் இரு பங்கு போட்டிகள் முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லும்.

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் டில்லி (59), கோல்கட்டா (48), பெங்களூரு (48), ஹரியானா (46), உ.பி., (42), ஜெய்ப்பூர் (38) அணிகள் முதல் ஆறு இடத்தில் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி (15ல் 3 வெற்றி), 27 புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது.

இதனிடையே ஏழாவது சீசனின் 'பிளே ஆப்' சுற்று அட்டவணை வெளியானது.

இதன்படி

* பட்டியலில் 3-6, 4-5 வது இடம் பிடித்த அணிகள் 'எலிமினேட்டர்' 1, 2 (அக். 14) போட்டிகளில் மோதும்.

* புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

* அக். 16ல் நடக்கும் முதல் அரையிறுதியில் 'நம்பர்-1' அணி, எலிமினேட்டர்-1ல் வென்ற அணியை சந்திக்கும். அடுத்த அரையிறுதியில் 'நம்பர்-2' அணி, எலிமினேட்டர்-2ல் வென்ற அணியை எதிர்கொள்ளும்.

* அக். 19ல் பைனல் உட்பட அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளன.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement