Advertisement

டில்லி அணி வெற்றி

புதுடில்லி: புரோ கபடி லீக் தொடரில் டில்லி அணி 33-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தியாவின் புரோ கபடி தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லும். மும்பை, ஆமதாபாத், சென்னையை அடுத்து, நேற்று முதல் டில்லியில் போட்டிகள் நடக்கின்றன. இதில் டில்லி, பெங்களூரு மோதின.

முதல் பாதியில் பெங்களூரு அணி 19-11 என ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதியில் சொந்தமண் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் டில்லி அணி மீண்டது. ஒருகட்டத்தில் 28-26 என முந்தியது. முடிவில் டில்லி அணி 33-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஐதராபாத் அணி, 24-21 என ஜெய்ப்பூரை வென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement