Advertisement

அணி மாறுகிறார் அஷ்வின்

புதுடில்லி: பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், வரும் ஐ.பி.எல்., தொடரில் டில்லி அல்லது ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது.

இந்தியாவின் 'நம்பர்-1' டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக (2008-15) கலக்கினார். பின் புனேக்கு (2016-17) சென்ற இவர், பஞ்சாப் அணி கேப்டனாக உள்ளார்.

2018 (7வது), 2019(6வது) என கடந்த இரு சீசனில் 28 போட்டியில் 25 விக்கெட் சாய்த்த இவர், அணியை 'பிளே ஆப்' சுற்றுக்கு கொண்டு செல்லவில்லை.

தற்போது விண்டீஸ் சென்ற இவருக்கு, முதல் டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து வரும் சீசனை பஞ்சாப் அணி இவரை கழற்றி விட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. டில்லி, ராஜஸ்தான் அணிகள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

டில்லி ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது. இங்கு சென்றால் அஷ்வின் பிரகாசிக்கலாம். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் (டில்லி), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான்) கேப்டனாக இருப்பதால் அஷ்வின், சாதாரண வீரராக மட்டும் தான் களமிறங்க முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement