Advertisement

இளம் இந்தியா சாம்பியன்

புதுடில்லி: ஓ.எப்.சி., யூத் கால்பந்து தொடர் பைனலில் தகிதியை வென்ற இளம் இந்திய அணி சாம்பியன் ஆனது.

ஓசியானா கால்பந்து கூட்டமைப்பு (ஓ.எப்.சி.,) சார்பில் யூத் கால்பந்து தொடர் (19 வயதுக்குட்பட்ட) வனுவாட்டுவின் போர்ட் வில்லாவில் நடந்தது. ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பைனலில் இந்தியா, தகிதி அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்தியாவின் மன்விர் சிங் (71வது), விக்ரம் பிரதாப் சிங் (88வது) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement