Advertisement

சர்ச்சை கிளப்பிய சாரா

லண்டன்: இங்கிலாந்து வீராங்கனை சாரா டெய்லரின் ஆடை இல்லாத போட்டோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை, விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் 30. கடந்த 2006ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். 10 டெஸ்ட், 126 ஒருநாள், 90 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மன அழுத்தம் உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்னைகளால் சமீபத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்தும் விலகிக் கொண்டார். தற்போது சர்ரே ஸ்டார் அணிக்காக விளையாடுகிறார்.

தற்போது மன அழுத்தம், பெண்கள் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் இணையதளம் ஒன்றுக்கு ஆடை இல்லாமல் 'போஸ்' கொடுத்துள்ளார். இதை தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

உடலில் ஆடை எதுவும் இல்லாமல் விக்கெட் கீப்பிங் செய்வது போன்று உள்ள இந்த போட்டோ குறித்து அவர் கூறுகையில்,''என்னைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இச்செயல் எனக்கு சற்று நெருடலாக இருந்தது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன்,'' என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement