Advertisement

கோஹ்லியை 'துரத்தும்' ஸ்மித்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 2வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 913 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். பர்மிங்காமில் நடந்த ஆஷஸ் தொடருக்கான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இவர், லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 92 ரன் விளாசினார். இதனையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (887 புள்ளி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கோஹ்லி முதல்வன்: முதலிடத்தில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (922 புள்ளி) நீடிக்கிறார். இருப்பினும் இவரை விட 9 தரவரிசை புள்ளி மட்டுமே ஸ்டீவ் ஸ்மித் குறைவாக பெற்றுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 'பவுன்சர்' பந்து தாக்கியதால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து பாதியில் விலகிய இவர், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் 'நம்பர்-1' இடம் பிடிக்கலாம். அதேநேரம் விண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

'டாப்-10' பட்டியலில் இந்தியா சார்பில் புஜாரா (881 புள்ளி), 4வது இடத்தில் நீடிக்கிறார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (914 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் தொடர்கிறார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா (794 புள்ளி), 6வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின் (763 புள்ளி), 10வது இடத்தில் நீடிக்கிறார்.

'ஆல்-ரவுண்டர்களுக்கான' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (387 புள்ளி), அஷ்வின் (321) முறையே 3, 7வது இடங்களில் தொடர்கின்றனர்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா (113 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement