Advertisement

புரோ கபடி ஹரியானா வெற்றி

Share

ஆமதாபாத்: புரோ கபடி லீக் ( பி.கே.எல்.,) தொடரின் 7வது சீசன் நடக்கிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், உ.பி., யோத்தா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 16-12 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த ஹரியானா அணி, ஆட்டநேர முடிவில் 36-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஹரியானா அணிக்கு விகாஸ் (12 புள்ளி), சுனில் (6), பிரஷாந்த் குமார் ராய் (3), வினய் (3) கைகொடுத்தனர். உ.பி., அணி சார்பில் ஸ்ரீகாந்த் ஜாதவ் (9 புள்ளி), மோனு கோயத் (5), சுமித் (4) ஆறுதல் தந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement