Advertisement

மாற்றுத் திறனாளி உலக 'டி–20': இந்திய அணி சாம்பியன்

பிளாக்பின்ச்: மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'டுவென்டி-20' கிரிக்கெட் சீரிஸ் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 36 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இங்கிலாந்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது உலக 'டுவென்டி-20' கிரிக்கெட் சீரிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில்இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த இந்திய அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.

'மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் ஆர்.ஜி. சான்டே, 34 பந்தில் 53 ரன்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து கை கொடுத்தார். மற்ற இந்திய வீரர்களான கே.டி. பனாசே (36), விக்ராந்த் கெனி (29), எஸ். மகேந்திரன் (33) நம்பிக்கை அளித்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 144 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் கே.டி. பனாசே, எஸ். கோயல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி உலக 'டுவென்டி-20' கிரிக்கெட் சீரிஸ் கோப்பை வென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement