Advertisement

பெடரர், ஜோகோவிச் வெற்றி

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில், மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவின் ஜுவான் இக்னாசியோ லண்டிரோ மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாம் குயரே மோதினர். இதில் அசத்தலாக ஆடிய ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement