Advertisement

கோப்பை வெல்வது யார்: திண்டுக்கல்–சேப்பாக்கம் மோதல்

சென்னை: டி.என்.பி.எல்., தொடரின் நான்காவது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல் அணி கடந்த முறை பைனலில், மதுரையிடம் கோப்பை இழந்தது. இம்முறை லீக் சுற்றில் தொடர்ந்து 6 வெற்றி பெற்று அசத்தியது. கேப்டன் ஜெகதீசன் (448 ரன்), ஹரி நிஷாந்த் (318) இத்தொடரில் தொடர்ந்து ரன் குவிப்பது அணியின் பலம். பவுலிங்கில் சிலம்பரசன் (14 விக்.,), ரோகித் (10) அசத்தும் பட்சத்தில் சாம்பியன் ஆகலாம்.

கடந்த 2017ல் சேப்பாக்கம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாவது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங்கில் கோபிநாத் (293), கங்கா ஸ்ரீதர் (225), சசிதேவ் (177) மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். பவுலிங்கில் பெரியசாமி (16 விக்.,) ஹரிஷ் குமார் (15) கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

யார் ஆதிக்கம்

டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் 5 முறை மோதின. இதில் சேப்பாக்கம் 3, திண்டுக்கல் 2 போட்டிகளில் வென்றன. இந்த சீசனில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • VEL - SALEM,இந்தியா


    THINDUKAL TODAY WIN THE METSH

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement