Advertisement

பாகிஸ்தானில் டேவிஸ் கோப்பை: இந்தியா எதிர்ப்பு

புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 'ஆசிய ஓசியானா' குரூப்-1 பிரிவு போட்டி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் (செப். 14-15) நடக்க உள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இரு நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் செல்ல இந்திய வீரர்கள் தயங்குகின்றனர். இப்போட்டியை ஒத்தி வைக்க அல்லது வேறு இடத்திற்கு மாற்ற இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.டி.ஏ.,), சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளது.

இதில்,'இந்தியாவுக்கான ரயில் போக்குவரத்தை பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. இந்தியாவுக்கான துாதர் எத்தனை நாள் நீடிப்பார் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில், டேவிஸ் கோப்பை குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். பொதுவான இடத்திற்கு மாற்றலாம் அல்லது நவம்பர்-டிசம்பருக்கு ஒத்தி வைக்கலாம்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.டி.ஏ., செயலர் ஹிரோன்மே சட்டர்ஜி கூறுகையில்,'' கடந்த 2001ல் நியூயார்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடந்தததால், இந்தியா- அமெரிக்கா இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதே முறையை, தற்போதும் கடைபிடிக்கப்படலாம்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement