Advertisement

பயிற்சியாளராக சக்லைன் ஆசை

Share

கராச்சி: இளம் பாகிஸ்தான் அணிக்கான தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் விண்ணப்பித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக், 42. இதுவரை 49 டெஸ்ட் (208 விக்.,), 169 ஒரு நாள் (288) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓய்வுக்குப்பின், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கான 'சுழல்' ஆலோசகராக இருந்துள்ளார். இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். சமீபத்திய, உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் திரும்பியதால், 'சீனியர்' அணி, இளம் அணி என அனைத்திற்கும் புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்பட உள்ளது.

சக்லைன் முஷ்டாக் கூறுகையில்,'' பாகிஸ்தான் அணிக்காக அதிக பங்களிப்பு தந்துள்ளேன். இதனால், இளம் அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். அடுத்த வாரம் நேர்காணலில் பங்கேற்க உள்ளேன்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement