Advertisement

நெஸ்டர் ஒப்பந்தம் ரத்து * சென்னை அணி முடிவு

சென்னை: இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடர் 'ஐ-லீக்'. கடந்த சீசனில் சென்னை சிட்டி அணி முதன் முறையாக சாம்பியன் ஆனது. இத்தொடரில் சென்னை அணிக்காக 8 கோல் அடித்து, 12 கோல் அடிக்க உதவியாக இருந்தவர் ஸ்பெயினின் நெஸ்டர் கோர்டில்லோ 29.

இவர், சென்னை அணியின் அனுமதி இல்லாமல், ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் கோவா அணியுடன் ஒப்பந்தம் ஆனது சர்ச்சை கிளப்பியது. இதுகுறித்து விசாரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,), விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட நெஸ்டருக்கு, 4 மாதம் தடை விதித்தது.

சென்னை அணி உரிமையாளர் ரோகித் ரமேஷ் கூறுகையில்,''நெஸ்டருக்கு மீண்டும் அணியில் இடம் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடும். எந்த ஒரு தனி வீரரையும் விட அணி தான் முக்கியம்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement