Advertisement

மன்னிப்பு கேட்டார் ஸ்டைன்

Share

புதுடில்லி: இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று 'டுவென்டி-20', மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் செப். 15, 18 மற்றும் 22ம் தேதிகளில் 'டுவென்டி-20' தொடர் நடக்க உள்ளது. இதற்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் சீனியர்' வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் 36. இந்நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்துள்ளார். இவர் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'புதிய பயிற்சியாளர்கள் எனது பெயரை மறந்து விட்டனர்,' என்றார்.

இதற்கு பதில் தந்த ரசிகர் ஒருவர்,'முக்கிய போட்டிகளில் உங்களை களமிறக்கலாம் என நினைத்திருப்பர்,' என்றார். இதற்கு ஸ்டைன்,'இந்தியா பெரிய அணி அல்ல என தேர்வாளர்கள் நினைத்து விட்டனர் போல. இதற்காக கோஹ்லி, இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement