Advertisement

ஐஸ்வர்யா புதிய சாதனை * பைக் ரேசில் சாம்பியன்

புதுடில்லி: எப்.ஐ.எம்., உலக கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் ஐஸ்வர்யா.

சர்வதேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு (எப்.ஐ.எம்.,) சார்பில் உலக கோப்பை தொடர் நடந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு இடங்களில் நடந்தது. கரடு முரடான மண் பாதை, மணல், மலைப் பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடுவர்.

இதில் பெண்கள் பிரிவில் டி.வி.எஸ்., அணிக்காக களமிறங்கினார் இந்தியாவின் ஐஸ்வர்யா பிஸ்சே 23. பெங்களூருவை சேர்ந்த இவர், துபாயில் நடந்த முதல் சுற்றில் கோப்பை வென்று மிரட்டினார். போர்ச்சுகலில் 3வது, ஸ்பெயினில் 5வது, ஹங்கேரியில் 4வது இடம் பிடித்தார். நான்கு சுற்று முடிவில் ஒட்டுமொத்தமாக 65 புள்ளிகள் பெற்ற ஐஸ்வர்யா, சாம்பியன் கோப்பை வென்று அசத்தினார்.

எப்.ஐ.எம்., உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். தவிர ஆண்கள், பெண்கள் என இருவரும் பங்கேற்ற ஜூனியர் பிரிவில் 46 புள்ளிகள் பெற்ற ஐஸ்வர்யா, இரண்டாவது இடம் பெற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • bullet - Chennai,இந்தியா


    congratulation

  • N.S.Sankaran - Chennai,இந்தியா


    Congratulations.Wish you bring more laurels to India in this sport not very popular in our country.

  • G K Manian - Chennai,இந்தியா


    Congrats It is a great achievement . Wishing you all the best . God bless you.

  • mohan - t.gode,இந்தியா


    vaalthukal

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement