Advertisement

சென்னை அணியில் மும்பை வீரர்

சென்னை: மும்பை வீரர் லுாசியன் கோயன், வரும் சீசனில் சென்னை கால்பந்து அணிக்காக விளையாட உள்ளார்.

ருமேனியா கால்பந்தின் மத்திய கள பகுதி வீரர் லுாசியன் கோயன் 36. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மும்பை அணிக்காக விளையாடினார். 2016ல் இவரது சிறப்பான ஆட்டம் கைகொடுக்க, மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

தற்போது ஒப்பந்தம் முடிந்த நிலையில், 2015, 2017-18 என இரு முறை சாம்பியன் ஆன சென்னை அணியில் இணைந்துள்ளார்.

அடுத்த இரு ஆண்டுக்கு சென்னை அணிக்காக விளையாட உள்ளார். கடந்த சீசனில் ஏமாற்றிய சென்னை அணிக்கு, ஐ.எஸ்.எல்., தொடரின் சிறந்த மத்திய கள வீரர் லுாசியன் வருகை சென்னை அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement