Advertisement

துப்பாக்கிக்கு 'நோ': கிரிக்கெட்டுக்கு 'ஓகே'

லண்டன்: காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலுக்குப்பதில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால், இந்தியா போட்டியை புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் 22வது தொடர், வரும் 2022ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் (ஜூலை 27- ஆக. 7) நடக்கவுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதல் நீக்கப்படுகிறது. இதற்குப்பதில், பெண்கள் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்டவை சேர்க்கப்பட உள்ளது. இந்திய நட்சத்திரங்கள் எப்போதும் துப்பாக்கி சுடுதலில் (மொத்தம்- 134 பதக்கம், 2018- 16 பதக்கம்) ஆதிக்கம் செலுத்துவர். இது, நீக்கப்பட்டால் காமன்வெல்த் விளையாட்டை புறக்கணிப்போம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை செய்திருந்தது. இந்நிலையில், துப்பாக்கி சுடுதலுக்குப்பதில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்படுவது உறுதியாகி உள்ளது.

அவசியம் இல்லை

காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் மார்டின் கூறுகையில்,'' துப்பாக்கி சுடுதல் போட்டி, காமன்வெல்த் விளையாட்டில் ஒவ்வொரு முறையும் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இதை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்பட்டது. முடிவில், இதற்கு பலன் கிடைக்கவில்லை. காமன்வெல்த் விளையாட்டில், மீண்டும் கிரிக்கெட் திரும்பியுள்ளது மகிழ்ச்சி. இது வரலாற்று சிறப்புமிக்க நாள்,'' என்றார்.

இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டில் 21 ஆண்டுக்குப்பின் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. கடைசியாக, 1998ல் மலேசியாவில் நடந்த ஆண்கள் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்கா தங்கம் வென்றது. மறுபுறம், இந்தியா எதிர்ப்பையும் மீறி, துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டிருப்பதால் காமன்வெல்த் விளையாட்டை இந்திய அணி புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement