Advertisement

பயஸ் ஜோடி தோல்வி

நியூபோர்ட்: 'ஹால் ஆப் பேம்' ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், நியூசிலாந்தின் டேனியல் ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவில் உள்ள நியூபோர்ட் நகரில், 'ஹால் ஆப் பேம்' ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல் ஜோடி, ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ், உக்ரைனின் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய பயஸ் ஜோடி, 'டை-பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 6-7 எனக் கோட்டைவிட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் ஏமாற்றிய இந்திய-நியூசிலாந்து ஜோடி 9-11 என இழந்தது.

முடிவில் பயஸ், டேனியல் ஜோடி 6-3, 6-7, 9-11 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement