Advertisement

வெள்ளி வென்றார் சிந்து

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சிந்து, வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த சிந்து, 2வது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார்.

மொத்தம் 51 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். அகானே யமாகுச்சி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பைனல் அலர்ஜி: சிந்துவுக்கு பைனல் என்றாலே அலர்ஜி தான். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் (எதிர்: ஸ்பெயினின் கரோலின் மரின்), ஆசிய விளையாட்டு (எதிர்: சீனதைபேயின் டாய் டிசூ யிங்), காமன்வெல்த் விளையாட்டு (எதிர்: இந்தியாவின் செய்னா நேவல்), தாய்லாந்து ஓபன் (எதிர்: ஜப்பானின் ஒகுஹரா), இந்தியன் ஓபன் (எதிர்: அமெரிக்காவின் பெய்வன் ஜாங்) தொடர்களின் பைனலில் தோல்வியடைந்தார். தற்போது இந்தோனேஷிய ஓபன் பைனலிலும் வீழ்ந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement