Advertisement

அஷ்வின், தவானுக்கு வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு

மும்பை: விண்டீசுக்கு எதிரான 'டுவென்டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான் தேர்வானார். டெஸ்ட் அணியில் அஷ்வின், விரிதிமன் சகா இடம் பிடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டுவென்டி-20', மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டுவென்டி-20' போட்டி வரும் ஆக. 3ல் புளோரிடாவில் நடக்கவுள்ளது.



தோனி இல்லை: மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக விராத் கோஹ்லி தொடர்கிறார். உலக கோப்பை தொடருக்கு பின், ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி, அடுத்த இரண்டு மாதம் துணை ராணுவப்படையில் சேர்ந்து சேவை செய்யப்போவதாக தெரிவித்தார். இதனையடுத்து இவருக்கு 'டுவென்டி-20', ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

சகா வாய்ப்பு: கடந்த 2018ல் நடந்த பிரிமியர் தொடரின் போது கண்ட தோள்பட்டை காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, முழு உடற்தகுதி பெற்றதால் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். இவர், கடைசியாக 2018ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்டில் விளையாடினார். சமீபகாலமாக ஒருநாள், 'டுவென்டி-20' அணிகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்தார். மற்றபடி துணைக் கேப்டன் ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் அணியில் தங்களது இடத்தை உறுதி செய்தனர்.





தவான் வருகை: சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பாதியில் திரும்பிய துவக்க வீரர் ஷிகர் தவான், பூரண குணமடைந்துவிட்டதால், ஒருநாள், 'டுவென்டி-20' அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வாய்ப்பு பெற்றார். 'மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் ஒருநாள், 'டுவென்டி-20' அணிக்கு மீண்டும் தேர்வாகினர்.

சகார் வாய்ப்பு: ராஜஸ்தானை சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சகார், 'டுவென்டி-20' அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இவர், பிரிமியர் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தேர்வானார். குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சகாரின் சகோதரர் தீபக் சகார் ஆகியோர் 'டுவென்டி-20' அணியில் இடம் பெற்றுள்ளனர்.



பும்ராவுக்கு ஓய்வு: தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு, ஒருநாள், 'டுவென்டி-20' போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதுகுப்பகுதி காயம் காரணமாக 'ஆல்-ரவுண்டர்' ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு எந்த ஒரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் மூன்று விதமான அணிகளிலும் இடம் பிடித்தனர்.

'டுவென்டி-20'

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குர்னால் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சகார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சகார், நவ்தீப் சைனி.

ஒருநாள் போட்டி

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட்

விராத் கோஹ்லி (கேப்டன்), அஜின்கியா ரகானே (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • KAPIL - kallague,சிங்கப்பூர்


    hi

  • palaniappan - chennai,இந்தியா


    டோனி இல்லாமல் யாரும் கிரிக்கெட்டை பார்க்கமாட்டார்கள். இது உண்மை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement